عبدالحميد باقوي · தமிழ்

١.தா ஸீம் மீம். (நபியே!) இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்
١٣.இன்னும், “(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கோனல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேசமுடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக
١٥.அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘ அவ்வாறல்ல (பயப்படாதீர்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என் அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன்
١٨.(அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) “நாங்கள் உம்மைக் குழந்தையாக எடுத்துக்கொண்டு வளர்க்கவில்லையா? நீர் (உமது வாலிபத்தை அடையும் வரை) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்
٢٤.அதற்கு (மூஸா) ‘‘ வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன்தான் (உலகத்தாரின் இறைவனும் ஆவான்). (இவ்வுண்மையை) நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நம்பிக்கை கொள்ளுங்கள்)'' என்று கூறினார்
٤٩.அதற்கு (ஃபிர்அவ்ன்), ‘‘ நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சூனியம் கற்றுக்கொடுத்த உங்கள் குரு அவர்தான். (இதன் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்
٥١.நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்
٥٢.பின்னர், மூஸாவுக்கு நாம் வஹ்யி அறிவித்ததாவது: ‘‘ (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் (அவர்களால்) பின்தொடரப்படுவீர்கள்'' (என்றோம்)
٦٣.ஆகவே, நாம் மூஸாவை நோக்கி ‘‘ நீர் உமது தடியினால் இந்தக் கடலை அடிப்பீராக'' என வஹ்யி அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப்போல் இருந்தது
١٥٥.அதற்கவர் ‘‘ (உங்களுக்கு அத்தாட்சியாக) இதோ ஒரு பெண் ஒட்டகம் (வந்து) இருக்கிறது. (நீங்கள் தண்ணீரருந்தும் இத்துரவில்) அது குடிப்பதற்கு ஒரு நாளும், நீங்கள் குடிப்பதற்கு ஒரு நாளும் குறிப்பிடப்படுகிறது
٢٢٧.(ஆயினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் மூலம்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தான். பிறரை துன்புறுத்திய) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்