٣.(நபியே!) அவர்கள் (உம்மை) நம்பிக்கை கொள்ளாததன் காரணமாக (துக்கத்தால்) நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர் போலும்
٤.நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துகள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்
٥.ரஹ்மானிடமிருந்து புதிதான ஒரு நல்லுபதேசம் வரும்போதெல்லாம் அதை அவர்கள் (நிராகரித்து) புறக்கணிக்காமல் இருப்பதில்லை
٦.(ஆகவே, இதையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதைப் (பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும்
٧.அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான எத்தனையோ புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கிறோம்
٨.நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை
١٠.(நபியே!) உமது இறைவன் மூஸாவை அழைத்து ‘‘ நீர் அநியாயக்காரர்களான ஃபிர்அவ்னுடைய மக்களிடம் செல்வீராக'' எனக் கூறியதை நீர் கவனித்துப் பார்ப்பீராக
١٣.இன்னும், “(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கோனல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேசமுடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக
١٤.மேலும், என் மீது அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டுதலும் இருக்கிறது. அதற்காக அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' (என்றும் கூறினார்)
١٥.அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘ அவ்வாறல்ல (பயப்படாதீர்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என் அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன்
١٦.ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, ‘‘ நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவனின் தூதர்களாவோம்
١٧.ஆகவே, ‘‘ இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு'' எனக் கூறுங்கள்! (என்பதாகவும் கட்டளையிட்டான்)
١٨.(அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) “நாங்கள் உம்மைக் குழந்தையாக எடுத்துக்கொண்டு வளர்க்கவில்லையா? நீர் (உமது வாலிபத்தை அடையும் வரை) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்
١٩.நீர் செய்(யத் தகா)த (ஒரு) காரியத்தையும் செய்தீர்! (அதை மன்னித்திருந்தும்) நீர் நன்றி கெட்டவராகவே இருக்கிறீர்'' என்றான்
٢١.ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என் இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன் தூதராகவும் என்னை ஆக்கினான்
٢٢.ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி காண்பிக்கக் கூடிய ஒரு நன்றியாகுமா?'' (இவ்வாறு மூஸா கூறினார்)
٢٤.அதற்கு (மூஸா) ‘‘ வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன்தான் (உலகத்தாரின் இறைவனும் ஆவான்). (இவ்வுண்மையை) நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நம்பிக்கை கொள்ளுங்கள்)'' என்று கூறினார்
٢٦.அதற்கவர் ‘‘ (அவன்தான்) உங்கள் இறைவனும் (உங்களுக்கு) முன் சென்று போன உங்கள் மூதாதைகளின் இறைவனும் ஆவான்'' என்று கூறினார்
٢٧.அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) ‘‘ உங்களிடம் அனுப்பப்பட்ட(தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்'' என்று சொன்னான்
٢٨.அதற்கு (மூஸா) ‘‘ கீழ் நாடு மேல் நாடு இன்னும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களின் இறைவனும் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)'' என்று கூறினார்
٢٩.அதற்கவன் ‘‘ என்னைத் தவிர (மற்றெதனையும்) நீர் கடவுளாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உம்மை சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்'' என்று கூறினான்
٣٣.மேலும், அவர் தன் கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் கண்ணைக் கூசச்செய்யும் பிரகாசமுடைய) வெண்மையாகத் தோன்றியது
٣٤.(இதைக் கண்ணுற்ற ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ இருந்த பிரதானிகளை நோக்கி, ‘‘நிச்சயமாக இவர் தேர்ச்சிபெற்ற சூனியக்காரராக இருக்கிறார்
٣٥.இவர் தன் சூனியத்தால் உங்கள் ஊரை விட்டும் உங்களைத் துரத்திவிட எண்ணுகிறார். ஆகவே, இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்'' என்று கேட்டான்
٣٦.அதற்கவர்கள், ‘‘ அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ஒரு தவணை அளித்து, துப்பறிபவர்களைப் பல ஊர்களுக்கும் அனுப்பிவை
٣٧.தேர்ச்சிபெற்ற சூனியக்காரர்கள் அனைவரையும் அவர்கள் (தேடிப் பிடித்து) உம்மிடம் அழைத்து வருவார்கள்'' என்று கூறினார்கள்
٣٨.(அவ்வாறே துப்பறிபவர்கள் பல ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு) குறித்த நாளில், குறித்த நேரத்தில் (குறித்த இடத்தில்) சூனியக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்
٤٠.(இவ்வாறு அங்கு கூடும்) சூனியக்காரர்கள் வெற்றி கொண்டால் (அவர்களுடைய மார்க்கத்தையே) நாம் பின்பற்றவும் கூடும் (என்றும் பறை சாற்றப்பட்டது)
٤١.சூனியக்காரர்கள் அனைவரும் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் வெற்றிபெற்றால் அதற்குரிய கூலி எங்களுக்கு உண்டா?'' என்று கேட்டார்கள்
٤٢.அதற்கவன் ‘‘ ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம் சபையிலும் வீற்றிருக்கக்கூடிய) நமக்கு நெருங்கிய பிரமுகர்களாகவும் ஆகிவிடுவீர்கள்'' என்று கூறினான்
٤٤.ஆகவே, அவர்கள் தங்கள் தடிகளையும், கயிறுகளையும் எறிந்து ‘‘ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியம் நிச்சயமாக நாங்கள்தான் வென்றுவிட்டோம்'' என்று கூறினார்கள்
٤٥.பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்து விட்டது
٤٩.அதற்கு (ஃபிர்அவ்ன்), ‘‘ நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சூனியம் கற்றுக்கொடுத்த உங்கள் குரு அவர்தான். (இதன் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்
٥٠.அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (அதனால் எங்களுக்கு) ஒரு பாதகமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கமே திரும்பச் சென்று விடுவோம்
٥١.நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்
٥٢.பின்னர், மூஸாவுக்கு நாம் வஹ்யி அறிவித்ததாவது: ‘‘ (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் (அவர்களால்) பின்தொடரப்படுவீர்கள்'' (என்றோம்)
٥٣.(அவ்வாறு அவர்கள் சென்று விடவே அதை அறிந்த) ஃபிர்அவ்ன், பல ஊர்களுக்கும் (மக்களை அழைக்க) பறைசாற்றுபவர்களை அனுப்பிவைத்து
٥٦.நிச்சயமாக நாங்கள் பெருந்தொகையினர்; (அத்துடன்) மிக்க எச்சரிக்கை உடையவர்கள்'' (என்று கூறி, பல ஊரார்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்)
٥٨.(இன்னும், அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும் மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் (அவர்களை வெளியேற்றினோம்)
٥٩.இவ்வாறு (அவர்களை வெளியேற்றிய பின்னர்) இஸ்ராயீலின் சந்ததிகளை அவற்றுக்குச் சொந்தக்காரர்களாகவும் ஆக்கிவிட்டோம்
٦١.இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்ட பொழுது ‘‘ நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்'' என்று மூஸாவுடைய மக்கள் கூறினார்கள்
٦٢.அதற்கு (மூஸா) ‘‘ அவ்வாறல்ல. நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் எனக்கு அறிவிப்பான்'' என்றார்
٦٣.ஆகவே, நாம் மூஸாவை நோக்கி ‘‘ நீர் உமது தடியினால் இந்தக் கடலை அடிப்பீராக'' என வஹ்யி அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப்போல் இருந்தது
٦٧.நிச்சயமாக இ(ச்சம்பவத்)தில் ஒரு பெரும் படிப்பினை இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்பவில்லை
٧١.அவர்கள் ‘‘ நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம்; அவற்றை தொடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார்கள்
٧٣.அல்லது (அவற்றை நீங்கள் ஆராதனை செய்வதால்) உங்களுக்கு ஏதும் நன்மையோ (ஆராதனை செய்யாவிட்டால்) தீமையோ செய்கின்றனவா?'' எனக் கேட்டார்
٧٤.அதற்கவர்கள் ‘‘ இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்து கொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவற்றை ஆராதனை செய்கிறோம்)'' என்றார்கள்
٧٦.நீங்களும் உங்கள் முன்னோர்களான மூதாதையர்களும் (எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள்)
٨٤.பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரை அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது சாந்தி நிலவுக! என்று பிரார்த்திக்கக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக
٩٣.(இச்சமயம்) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களையே பாதுகாத்துக் கொள்ளுமா?'' என்று கேட்கப்படும்
٩٤.(பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்
٩٥.(பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்
١٠٢.நாம் (உலகத்திற்குத்) திரும்பச் செல்லக்கூடுமாயின், நிச்சயமாக நாம் மெய்யான நம்பிக்கையாளர்களாகி விடுவோம்'' என்று புலம்புவார்கள்
١١١.அதற்கவர்கள் ‘‘ உம்மை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? (எங்களுக்குக் கூலி வேலை செய்யும்) ஈனர்கள்தான் உம்மைப் பின்பற்றியிருக்கின்றனர்'' என்று கூறினார்கள்
١١٢.அதற்கு அவர், ‘‘ நான் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை இன்னதென அறியமாட்டேன். (அதை விசாரிப்பதும் என் வேலையல்ல) என்றும்
١١٣.(இவற்றைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா
١١٦.அதற்கவர்கள் ‘‘ நூஹே! நீர் இதை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் கல்லெறிந்து கொல்லப்படுவீர்'' என்று கூறினார்கள்
١١٨.ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து, என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார்
١١٩.ஆகவே, நாம் அவரையும் (நம்பிக்கை கொண்டு) அவருடன் இருந்தவர்களையும் (மற்ற உயிர்ப் பிராணிகளால்) நிறைந்திருந்த கப்பலில் ஏற்றி பாதுகாத்துக் கொண்டோம்
١٢٩.நீங்கள் (அழியாது) என்றென்றும் இருப்பவர்களைப் போல் (உங்கள் மாளிகைகளில் உயர்ந்த) வேலைப்பாடுகளையும் அமைக்கிறீர்கள்
١٣٢.உங்களுக்குத் தெரிந்திருக்கும் பல பொருள்களையும், எவன் உங்களுக்குக் கொடுத்து உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்
١٣٥.(அவனுக்கு மாறு செய்தால்) மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு நிச்சயமாக வருவதை(ப் பற்றி) நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்
١٣٦.அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (ஹூதே!) நீங்கள் எங்களுக்கு நல்லுபதேசம் செய்வதும் நல்லுபதேசம் செய்யாதிருப்பதும் சமமே
١٣٩.மேலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம். நிச்சயமாக இதில் நல்லதோர் அத்தாட்சியிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை
١٤٢.அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ் (நபி) அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (பாவத்தை விட்டு விலகி) அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டாமா
١٤٥.இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே தவிர (வேறுயாரிடமும்) இல்லை
١٤٩.திறமைசாலிகளாக மலைகளைக் குடைந்து வீடுகளை அமைக்கிறீர்கள். (அதில் என்றென்றுமே தங்கியிருக்க நீங்கள் விட்டு வைக்கப்படுவீர்களா)
١٥٣.அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) கூறினர்: ‘‘ உம்மீது எவரோ சூனியம் செய்துவிட்டார்கள். (ஆதலால், உமது புத்தி தடுமாறிவிட்டது)
١٥٤.நீர் நம்மைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (நாம் விரும்பியவாறு) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவீராக'' (என்று கூறினார்கள்)
١٥٥.அதற்கவர் ‘‘ (உங்களுக்கு அத்தாட்சியாக) இதோ ஒரு பெண் ஒட்டகம் (வந்து) இருக்கிறது. (நீங்கள் தண்ணீரருந்தும் இத்துரவில்) அது குடிப்பதற்கு ஒரு நாளும், நீங்கள் குடிப்பதற்கு ஒரு நாளும் குறிப்பிடப்படுகிறது
١٥٦.மேலும், நீங்கள் அதற்கு ஒரு தீங்கும் செய்யாதீர்கள். அவ்வாறாயின் கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்'' என்று கூறினார்
١٥٧.(இவ்வாறு கூறியிருந்தும்) அவர்கள் அதன் கால் நரம்பைத் தறித்து விட்டார்கள். (அதனால் வேதனை வருவதன் அறிகுறியைக் கண்டபொழுது) அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்
١٥٨.ஆகவே, அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது. நிச்சயமாக (அவர்களுக்கு) இதிலோர் அத்தாட்சி இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவேயில்லை
١٦١.அவர்களுடைய சகோதரர் லூத் அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டாமா
١٦٤.இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே தவிர (வேறுயாரிடமும்) இல்லை
١٦٦.உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்களே! நீங்கள் (அல்லாஹ்வின் இயற்கை முறையை) மீறிவிட்ட மக்கள் ஆவீர்கள்'' என்று கூறினார்
١٦٧.அதற்கவர்கள் ‘‘ லூத்தே! (இவ்வாறு கூறுவதை விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் (நம் ஊரை விட்டுத்) துரத்தப்படுவீர்'' என்று கூறினார்கள்
١٦٩.‘‘ என் இறைவனே! இவர்களின் (தீய) செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக'' (என்று பிரார்த்தித்தார்)
١٧١.எனினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர அவள் (லூத்துடன்) வராது பின் தங்கியவர்களுடன் தங்கி (அழிந்து) விட்டாள்
١٧٣.அவர்கள் மீது நாம் (கல்) மழையை பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட(அ)வர்களின் (மீது பொழிந்த கல்) மழை மகா கெட்டது
١٧٤.நிச்சயமாக இதிலோர் நல்ல அத்தாட்சியிருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலான வர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை
١٧٧.ஷுஐப் (நபி) அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்கு அஞ்சி பாவத்திலிருந்து) விலகிக் கொள்ள வேண்டாமா
١٨٠.இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தார்களின் இறைவனிடமே தவிர (வேறெவரிடமும்) இல்லை.”
١٨٣.மனிதர்களுக்கு நிறுத்துக் கொடுக்க வேண்டிய அவர்களுடைய பொருள்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள். நீங்கள் பூமியில் கடுமையாக விஷமம் (-கலகம்) செய்து கொண்டு அலையாதீர்கள்
١٨٤.உங்களையும் உங்களுக்கு முன்னுள்ளோரையும் எவன் படைத்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்'' என்றும் கூறினார்
١٨٦.நீர் நம்மைப்போன்ற மனிதரே தவிர வேறில்லை. நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே மதிக்கிறோம்
١٨٧.நீர் உண்மை சொல்பவராக இருந்தால் வானத்(தைப் பல துண்டாக்கி, அ)திலிருந்து சில துண்டுகளை நம்மீது விழவையுங்கள்'' (என்று கூறினார்கள்)
١٨٨.அதற்கவர் ‘‘ நீங்கள் செய்து கொண்டிருக்கும் (மோசமான) காரியத்தை என் இறைவன் நன்கறிவான்; (இதற்குரிய தண்டனையை உங்களுக்கு அவசியம் தருவான்)'' என்று கூறினார்
١٨٩.(எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது
١٩٣.(இறை கட்டளைப் பிரகாரம்) ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர் என்னும் ஜிப்ரயீல்) இதை உமது உள்ளத்தில் இறக்கிவைத்தார்
٢٠١.ஆகவே, துன்புறுத்தும் வேதனையை இவர்கள் (தங்கள் கண்ணால்) காணும் வரை இதை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்
٢٠٥.(நபியே!) நீர் கவனித்தீரா? நாம் இவர்களை (இவர்கள் விரும்புகிறவாறு) பல வருடங்கள் சுகமனுபவிக்க விட்டு வைத்திருந்தபோதிலும்
٢٠٨.(உபதேசம் செய்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களை அனுப்பாத வரை எவ்வூராரையும் நாம் அழித்துவிடவில்லை
٢٠٩.(ஒரு தூதரை அனுப்பி, வேதனைப் பற்றி) ஞாபகமூட்டாது நாம் (எவரையும் அழித்து) அநியாயம் செய்பவர்களாக இருக்கவில்லை
٢١٣.ஆதலால், (நபியே!) நீர் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைக்காதீர். (அழைத்தால்) அதனால் நீர் வேதனைக்குள்ளாவீர்
٢١٦.ஆனால், அவர்கள் உங்களுக்கு மாறு செய்தால் ‘‘ நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றிலிருந்து விலகி விட்டேன்'' என்று கூறி
٢٢٣.தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே
٢٢٥.நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா
٢٢٧.(ஆயினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் மூலம்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தான். பிறரை துன்புறுத்திய) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்